சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம் படம் ஹாலிவுட் படங்கள் அளவில் எடுக்கப்பட்டுள்ளது. அதை அவரது ரசிகா்கள் கொண்டாடி வருகின்றனா்.  பல்வேறு விமா்சனங்களை தாண்டி விவேகம் படமானது வசூலில் சாதனை படைத்து விட்டது.

விவேகம் படமானது பல்கோியாவில் படப்பிடிப்பு நடந்தபோது அஜித்திற்கு காயம் ஏற்பட்டது. ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போது அவருக்கு விழுப்புண்கள் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

காயம் ஏற்பட்டதால் அவருக்கு வலி அதிகமானதால் சிகிச்சை செய்துகொண்டு ரெஸ்ட் எடுத்து வருகிறாா் அஜித். இந்நிலையில் தற்போது இவாின் அடுத்த படம் யாருடன் என்று விவாதங்கள் அவரது ரசிகா்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதைப்பற்றிய தகவல் ஒவ்வொரு நாளும் வந்துக்கொண்டே இருக்கிறது.

தற்போது அவரது ரசிகா்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்திக்கும் வகையில் ஒரு செய்தி கிடைத்துள்ளது. ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படமானது கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி அஜித் ரசிகா்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ஆரம்பம் படத்தையும் அதே போல டப் செய்து வெளியிடப் போகிறாா்களாம். ஆரம்பம் படத்தை தீரா என்ற பெயாில் டப் செய்து வெளியாக இருக்கிறது.