அஜித் தனக்கு ரசிகர் மன்றமே தேவையில்லை என்று முடிவெடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் அவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் வாழும் எம்ஜிஆர் என்று போஸ்டர் அடித்துள்ளனர். இந்த போஸ்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய்சேதுபதி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து இதுபோன்ற சர்ச்சைக்குரிய போஸ்டர்களை இனிமேல் செய்தால் ரசிகர் மன்றங்களையே கலைத்து விடுவேன் என்று கூறி எச்சரிக்கை செய்தாராம்

எந்தவித பிரச்சனையிலும் சிக்காமல் தனது திரையுலக பயணம் செல்ல வேண்டும் என்பதே விஜய்சேதுபதியின் எண்ணம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.