அஜித்தின் ‘காதலாட’ பாடலின் முழுவரிகள்

அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் இடம்பெற்ற சர்வைவா மற்றும் தலை விடுதலை ஆகிய இரண்டு பாடல்களுமே நல்ல ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலான ‘காதலாட’ என்ற பாடல் நேற்று மதியம் வெளியாகி அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடலின் முழுவரிகளை தற்போது பார்ப்போம்:

உன்னோடு வாழ்வது ஆனந்தமே..
ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே..
தீராத தேவைகள் ஆனந்தமே..
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே..

பல்லவி

காதலாட காதலாட காத்திருந்தேனே..
ஆசை நூலில் பாச பூக்கள் கோர்த்திருந்தேனே..
செய்யாத மாதவம் நீயே
பொய்யாத பேரருள் நீயே
ஓயாத தேன்மழை அதை ஏந்தவே புது பூமி செய்வோமே…

சரணம்

நீலவானம் மாய்ந்த போதும்
நீ இருப்பாயே…
தேவகானம் தூய மெளனம்
நீ கொடுப்பாயே…

பொல்லாத போர்களில் உன் வேர்வையாக பூத்திருப்பேனே..
நில்லாத ஓடையாய் உன் கைபிடித்து ஓடுகின்றேனே..
ஆலகால நஞ்சு பாய்ந்தது
மெல்ல மீள்வோமே..
பிள்ளை தெய்வம்
மண்ணில் தோன்றிட
வாழ்வு நீள்வோமே