திருப்பதி கோவிலில் அஜித் சாமி தரிசனம்!

தல அஜித் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிக்கும் வழக்கம் உடையவர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு அஜித், திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தார். அஜித் திருப்பதி வந்திருப்பதை கேள்விப்பட்ட பலர் அவருடன் புகைப்படம் எடுக்கவும், செல்பி எடுக்கவும் முண்டியடித்தனர். அனைவருடனும் பொறுமையாக செல்பி எடுத்த அஜித் இன்று சென்னை திரும்பியுள்ளதாக தெரிகிறது.

அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் அந்த படம் வெற்றி அடையவே அவர் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.