அஜித், நயன்தாரா நடிக்கும் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படம் திட்டமிட்டபடி வரும் தீபாவளிக்கு திரைக்கு வருமா? என்ற கேள்விக்கு தயாரிப்பு தரப்பினர் உறுதியான பதிலை கூறவில்லை

இந்த படத்தின் அனைத்து ஆரம்பகட்ட பணிகளும் முடிந்துவிட்டதால் படப்பிடிப்பை தொடர்ச்சியாக இடைவெளியின்றி நடத்தினால் தீபாவளிக்கு வெளியிடுவது சாத்தியம்தான் என்றாலும், வேறு ஏதேனும் காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டால் இந்த படத்தை வரும் பொங்கல் திருநாளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

அஜித், நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்,. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது