மீண்டும் வியாழக்கிழமை செண்டிமெண்டில் ‘விவேகம்’

தல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தில் இடம்பெறும் அஜித், விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது செர்பியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு வியாழக்கிழமை செண்டிமெண்ட்பட வரும் வியாழன் அன்று படப்பிடிப்பு முடிவடையதுள்ளதாகவும், அதன்பின்னர் அஜித், விவேக் ஓபராய் உள்பட படக்குழுவினர் அனைவரும் வரும் வார இறுதியில் இந்தியா திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயாரிப்பு நிறுவனம் செய்து வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் தயாராகி வருவதாகவும், விரைவில் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது