அஜித்தின் ‘விவேகம்’ ரன்னிங் டைம்

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி முடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் எடிட்டிங் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும், எடிட்டிங் செய்த பின்னர் இந்த படம் 140 நிமிடங்கள் அதாவது 2 மணி 20 நிமிடங்கள் ஓடும் வகையில் உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படம் இன்னும் சென்சாருக்கு செல்லவில்லை என்றாலும் ஒருவேளை சென்சாரில் எந்தவித கட்’டும் இல்லை என்றால் இந்த படத்தின் ரன்னிங் டைமில் மாற்றமிருக்காது என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி இந்த படம் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் வியாபாரமும் வெகு ஜோராக நடந்து வருவதாகவும், தமிழக ரிலீஸ் உரிமையை பெற முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் 97% படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.