சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் டீசர் மே மாதம் 18ஆம் தேதி வியாழக்கிழமை வெளிவரவுள்ளதாக இயக்குனர் சிவா, நேற்றிரவு தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்

ஆனால், தற்போது சற்று முன்னர் அவர் மே 18ல் விவேகம் டீசர் இல்லை என்று கூறி ஒரு புதிய தேதியை அறிவித்துள்ளார். இந்த தேதி அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. ஏனெனில் மே 18ல் இருந்து மே 11க்கு டீசர் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது என்பதே இந்த இன்ப அதிர்ச்சிக்கு காரணம்

இதையும் படிங்க பாஸ்-  விசுவாசம்' படப்பிடிப்பில் அஜித்-நயன்தாரா காதல் காட்சிகள்

பல்கேரியாவில் படப்பிடிப்பை நடத்தி வரும் சிறுத்தை சிவா, எதிர்பார்த்ததைவிட சீக்கிரமே படப்பிடிப்பு முடியவுள்ளதால் இந்த தேதி மாற்றம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி கிடைத்ததும் ஒரு வாரம் முன்பே ‘விவேகம்’ டீசர் வெளியாவதை எண்ணி மகிழ்ச்சிக்கடலில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்