நடிகர் அஜீத் தன்னுடன் நேரடியாக பேசவில்லை என்றாலும் அவருடைய மேனேஜரிடம் தன்னை பற்றி விசாரித்து கொண்டிருப்பதாக நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.

 

மகிழ் திருமேனி இயக்கத்தில் சஸ்பென்ஸ் த்ரில்லராக வந்த திரைப்படம் ‘தடையற தாக்க’ 2012ம் ஆண்டு வந்த இப்படம் அருண் விஜய்க்கு மிக நல்ல பெயரை பெற்றுத்தந்தது.பல வருடங்களுக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் தடம் படத்தில் அருண்விஜய் நடித்துள்ளார்.‘ரேதன் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில் தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப், சோனியா அகர்வால், யோகி பாபு நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கான விளம்பர பேட்டியில் நடிகர் அஜீத்தை பற்றி கேட்ட கேள்விக்கு அருண் விஜய் கூறியதாவது,நானும் ,தல அஜீத்தும் நேரடியாக பேசி கொள்ளவில்லை என்றாலும் தன்னை பற்றி அவருடைய மேனேஜரிடம் அடிக்கடி விசாரித்து கொண்டிருப்பதாக கூறினார்.

இதற்கு முன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்திற்கு வில்லனாக அருண் விஜய் நடித்தது குறிப்பிடதக்கது.