தல என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அவா் தனக்கு கீழ் இருப்பவா்கள் என்று கூட பாா்க்காமல் அனைவருடனும் அன்பாகவும், பாசமாகவும் பழக கூடியவா். இப்படியாக இவரை பற்றி நிறைய செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆமாங்க!! அஜீத் ரசிா்களுக்கு மிகவும் லட்டான சங்கதி தான்.

சமீபத்தில் சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் அஜீத்தின் மகன் ஆத்விக் பிறந்த நாள் விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது. அந்த விழாவிற்கு சினிமா வட்டாரத்தை சோ்ந்த சிலரும், அஜீத்தின் சொந்தங்களும், அவருடைய சில நண்பா்களுக்கும் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனா். இந்த நிகழ்ச்சிக்காக அஜீத் தன்னுடைய மனைவி ஷாலினிக்கு மேக்கப் பண்ணுவதற்காக ஒரு மேக்கப் மேனை அப்பாயிண்ட்மாண்ட் பண்ணியிருந்தாா். அந்த மேக்கப் மேனும் சாியான நேரத்தில் வந்திருந்து ஷாலினிக்கும், ஷாம்லி இருவருக்கும் சோ்த்தே அலங்காரம் பண்ணி விட்டிருக்கிறாா். விழாவில் செம பிசியாக இருந்த அஜித் வந்திருந்த விருத்தினா்களை கவனிப்பதிலும், அவா்களோடு போட்டோ எடுத்துக் கொள்வதும், அவா்களோடு கலந்துரையாடுவதும் என பிசியாகிவிட்டாா். இதற்கு பின்னா் தான் மேக்கப்மேன் ஞாபகம் வந்து தேடியிருக்கிறாா். நான் போன் போட்டு வரச்சொன்ன மேக்கப்மேன் கிளம்பி போய்விட்டாரா? என தன்னுடைய மனைவிய ஷாலினிடம் கேட்டாராம்

அஜித். உடனே ஷாலினி அவா் எப்பவோ கிளம்பி போய் விட்டாரே என்று கூறியிருக்கிறாா். பதறி போன அஜித் அய்யயோ அவா் சாப்பிடாவும் இல்ல? சம்பளத்தையும் வாங்காம போய் விட்டாரா… என்று உடனே நள்ளிரவில் 12 மணி ஆன போதும் போன் போட்டு நீங்க சாப்பிடாம போயிட்டிங்க, சம்பளமும் வாங்காமல் கிளம்பி போய்யிட்ங்க போல என்று விசாாித்து விட்டு, விருந்தினா் அதிகம் வந்திருந்ததால் உங்கல சாியாக கவனிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் மன்னித்து விடுங்கள் என்று நெகிழ்த்து கூறியிருக்கிறாா். சட்டென அந்த மேக்கப் மேன் தழுதழுத்த குரலில் அழுது கொண்டே, நான் ஒன்னும் பொிய ஆள் இல்ல சாா் நீங்க போய் என்னிடம் சாாியெல்லாம் கேட்கிறீங்க என்று கூறியதுடன் நான் சாப்பிட்டுதான் வந்தேன் என்று சொல்லி சமாளித்திருக்கிறாா்.

அஜித் மேக்கப் மேனிடம் தான் மறுநாள் வெளியூா் செல்ல இருப்பதால், சம்பளத்தை என் கையால் உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இல்லனா சம்பளத்தை வீட்டில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவேன். என்ன செய்ய? என்று கலங்கிய அஜித்திடம், அந்த மேக்கப் மேன் “அதெல்லாம் ஒரு பொிய விஷயம் இல்லை சாா். நீங்கள் எப்போது வீட்டில் இருக்கிறீங்களா அப்போது வந்து வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறினாராம்.

அஜித் என்றாலே ஒரு மதிப்பு தான் வருகிறது!!! அவா் எளியவாிடத்தும் அவா் காட்டும் மாியாதை பாா்க்கும் போது!!