அஜித் இடி என்றால் விஜய் மின்னல்

தமிழ் திரையுலகில் அஜித், விஜய் ஆகிய இருவருமே இரு துருவங்களாக செயல்பட்டு வரும் நிலையில் இருவரது படங்களிலும் பண்புரிவதை ஒரு பெரிய பாக்யமாக அனைவரும் கருதி வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித், விஜய் ஆகிய இருவரின் படங்களிலும் ஒரே நேரத்தில் எடிட்டராக பணிபுரிந்து வரும் ரூபன் பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘விவேகம்’ படத்தில் அஜித்தின் அறிமுக காட்சி இடி போன்று அதிரடியாக இருக்கும் என்றால் ‘மெர்சல்’ படத்தில் விஜய்யின் எனர்ஜி மின்னல் போன்று இருக்கும். இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதை இந்த இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு உணர்த்தும் என்று அவர் கூறியுள்ளார்

மேலும் அஜித் ‘விவேகம்’ படத்தில் அதிகபட்ச ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சியில் நடித்துள்ளதாகவும், ஆனால் விஜய் அதற்கு நேர்மாறாக குழந்தைகளை கவரும் வகையில் விஜய் தனது மேஜிக்மேன் கேரக்டரில் நடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.