விஸ்வாசம் படத்தில் நடிகா் அஜித் தாடியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘விஸ்வாசம்’. சிவா-அஜித் கூட்டணிக்கு இது நான்காவது படம்.

இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், படப்பிடிப்பு வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.

அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (முதல் பார்வை) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

‘விஸ்வாசம்’ படத்தின் தமிழக உரிமையை ‘அறம்’ பட தயாரிப்பாளர் ராஜேஷ் வாங்கியுள்ளார். அதேபோல் படத்தின் இந்தி உரிமையை பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருக்கும் மனிஷ் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது அஜித் சக நடிகர்கள் மற்றும் தனது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் அவ்வப்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.