உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார்.  இதையடுத்து அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ஏற்கவேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை வருத்துவருகின்றனர். ஆதரவு ஒருபுறம் இருந்தாலும் எதிர்ப்புகளும் பலமாகவே உள்ளது. இந்த பரபரப்பு சூழ் நிலைக்கு மத்தியில் வருகிற 29ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித் போயஸ் கார்டன் சென்று அங்கு சசிகலாவை சந்தித்தார்.ஆனால் இந்த தகவல் அஜித் தரப்பிலிருந்தோ அல்லது அதிமுக தரப்பிலிருந்தோ உறுதி செய்யப்படவில்லை.

முன்னதாக ஜெயலலிதா உடல் அடக்கம் செய்தபோது நடிகர் அஜித் பல்கேரியாவில் இருந்தார். பின்னர் உடனடியாக கிளம்பி அன்று மாலையே சென்னை வந்து மெரிஅவில் அடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.