அஜித் நடிக்க வேண்டிய படம் மிஸ் ஆனது எப்படி? எழில் வெளியிட்ட ரகசியம்

பிரபல இயக்குனர் எழில், இளையதளபதி விஜய்க்கு ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என்ற சூப்பர் ஹிட் படமும், தல அஜித்துக்கு ‘பூவெல்லாம் உன் வாசம்’ என்ற ஹிட் படத்தையும் கொடுத்தவர். அதன் பின்னர் இருவர் படங்களையும் இயக்கும் வாய்ப்பு இல்லாமல் போனாலும் தற்போது அவர் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில்தான் உள்ளார்.

எழில் இயக்கிய ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது அவர் ‘சரவணன் இருக்க பயமேன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் தன்னுடைய இயக்கத்தில் உருவான ஒரு படத்தில் நடிக்கவிருந்ததாகவும், ஆனால் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் ஏற்பட்ட ஒரு சிறு மனத்தாங்களால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறினார். அந்த படம் தான் பிரபுதேவா நடித்த ‘பெண்ணின் மனதை தொட்டு’ என்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அஜித் படத்தை இயக்குவேன் என்றும் அவருக்காகவே ஒரு காமெடி ஸ்க்ரிப்ட் தயாராக இருப்பதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.