தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்குக்ம் 4வது படம் ‘விசுவாசம்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதமே தொடங்கவிருந்த நிலையில் கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்று விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேற்றே அஜித் உள்பட படக்குழுவினர் ஐதராபாத்திற்கு சென்றுவிட்டனர்.

அஜித் ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடிக்கவுள்ள இந்த படத்தில் போஸ் வெங்கட், யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஒருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். இவர் ஏற்கனவே இந்த படத்திற்காக மூன்று பாடல்களை கம்போஸ் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும்