அஜித் தற்போது விசுவாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது பிரபுதேவா என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும், இந்த படம் இன்றைய அரசியல் சூழ்நிலைகளை விளக்கும் ஒரு அதிரடி படம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  கர்நாடகாவில் களமிறங்க ஸ்கெட்ச் போட்ட ‘தூக்குதுரை’!

மேலும் இந்த படத்திற்கு ‘அறம்’ இயக்குனர் கோபிநயினார் வசனம் எழுதவுள்ளதாகவும் தெரிகிறது. கோபியின் கனல் கக்கும் அரசியல் வசனத்தில் அஜித் நடிக்கவுள்ளதால், அஜித் இந்த படத்தின் மூலம் அரசியல் ஆழத்தை பார்க்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது