Home சற்றுமுன் ஷங்கருடன் இணைகிறாரா அஜித்?

ஷங்கருடன் இணைகிறாரா அஜித்?

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘விவேகம்’. அஜித்-சிறுத்தை சிவா கூட்டணியில் மூன்றாவதாக வெளிவந்த இப்படத்திற்கு முந்தைய 2 படங்களைவிட வரவேற்பு குறைவு என்றுதான் சொல்லவேண்டும். இந்நிலையில், நான்காவது முறையாகவும் அஜித்-சிவா கூட்டணி இணையப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அஜித்தின் ரசிகர்களோ மீண்டும் சிவாவுடன் கூட்டு சேரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அஜித் அடுத்தாக சிவாவுடன் கூட்டணி சேரவில்லை என்றும், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் தற்போது கோலிவுட்டில் பரபரப்பான செய்தி உலாவி வருகிறது. இதுவரை அஜித்-ஷங்கர் எந்த படத்திலும் கூட்டணி வைத்ததில்லை. இது உறுதியானால் முதன்முறையாக இவர்கள் கூட்டணியில் உருவாகும் அந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் தற்போது ‘2.ஓ’ படத்தின் இறுதிக்கட்ட வேளைகளில் பிசியாக இருக்கிறார். அஜித்தும் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வு எடுத்து வருகிறார். இவர்கள் இருவரும் இருவரும் இணைவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகாவிட்டாலும் கூடிய விரையில் அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.