விவேகம் படத்தை அடுத்து அஜித் இயக்குனர் சிவா இயக்கத்திலேயே விஸ்வாச்ம் படத்தில் நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படம் இன்னும் துவங்கப்படுவதற்குள் அஜித் அடுத்த படம் குறித்த தகவல்கள் தீயாய் பரவி வருகின்றன. தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் அஜித்திடம் ஒரு கதை சொன்னதாகவும் கதை பிடிக்கவே அடுத்த படத்தை வினோத் இயக்குகிறார் என்றும் கூறப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்கு வரபோவது அஜித் தம்பி!

ஆனால் அஜித் அடுத்த படத்தை இயக்குபவர் பிரபுதேவா என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகவே கூறப்படுகிறது. இந்த படத்தை நயன்தாராவின் மேனேஜர் ராஜேஷ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே அறம் வெற்றிப் படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.