காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும்,ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

இதில் நடிகர்கள் கமல், ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், கார்த்தி, பார்த்திபன், சிவகுமார், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ரேகா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும், இசையமைப்பாளர் இளையராஜா, வைரமுத்து, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தாணு, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

தமிழர்கள் நலனுக்காக நடைபெற்ற இந்த போராட்டத்தில் நடிகர் அஜித் வழக்கம்போல டிமிக்கி கொடுத்தார். பொதுவாகவே எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாத அவர் தமிழர்களுக்கான போராட்டத்தில் கலந்துகொள்ளாதது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.