சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம்  கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்துக்கு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.வசூலில் பெரும்  சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியில் விஜய் குறித்து அஜித் மறைமுகமாகப் பேசி இருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது, படத்தில் ஒரு சண்டைக்காட்சியின் போது தன் மகளிடம் அஜித் ‘இதுவரை எத்தனை போட்டில ஜெயிச்சுருக்க?’ எனக் கேட்பார். அதற்கு அச்சிறுமி, ’62’ எனப் பதிலளிப்பார். உடனே அஜித் ‘அடங்கேப்பா’ என்று ட்ரைலரில் வரும் வசனத்தை சொல்வார்.

இந்தக் காட்சியைத் தான் விஜய் பற்றி அஜித் பேசியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் இதுவரை விஜய் 62 படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தளபதி 63 படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அஜித் பேசும் வசனம் விஜய்யை பாராட்டும் விதமாகவே இருப்பதாக தோன்றுகிறது.