தல அஜித் தனது படங்களில் பேசும் ஒவ்வொரு பஞ்ச் டயலாக்கையும் அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ‘தெறிக்க விடலாமா? என்ற இரண்டே இரண்டு வார்த்தை பஞ்ச் டயலாக் உலகப்புகழ் பெற்றது.

இந்த நிலையில் தற்போது அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்திலும் ஆங்காங்கே பஞ்ச் டயலாக் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவற்றில் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘என்னை தோற்கடிக்கணும்ன்னு எல்லாரும் நினைக்கிறாங்க..நான் தோற்கணுமா இல்லையான்னு நான் தான்தாண்டா முடிவு செய்யணும்’ என்ற பஞ்ச் டயலாக் ‘விவேகம்’ படத்தில் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த வசனத்தை அஜித் திரையில் உச்சரிக்கும்போது உண்மையிலேயே தியேட்டர் தெறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.