தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டுவதற்கு நிதி திரட்ட கடந்த ஆண்டு சென்னையில் கிரிக்கெட் போட்டியை நடத்திய நடிகர் சங்கம் தற்போது மலேசியாவில் பிரமாண்டமான கலைவிழாவை நடத்தியது

இந்த கலைவிழாவில் ஓரளவுக்கு டிக்கெட் பணம் வசூலானாலும், நடிகர் ,நடிகையர்களின் விமான செலவு, ஓட்டலில்தங்கும் செலவு மற்றும் பல செலவுகளால் பெரிதாக நிதி சேரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்திடம் இந்த கலைவிழாவில் கலந்து கொள்ள நடிகர் சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்தபோது, ‘பொதுமக்கள் தரும் டிக்கெட் பணத்தில்தான் நாம் சம்பாதிக்கின்றோம். பிறகு ஏன் நடிகர் சங்க கட்டிடத்திற்கும் அவர்களிடமே நிதி கேட்க வேண்டும்? நாமளே நிதி கொடுக்கலாமே? என்று கூறியிருக்கின்றார். ஆனால் அஜித்தின் யோசனையை நடிகர் சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது