தமிழ்நாடு வேண்டாம்! ஆந்திராவுக்கு போயிடுவோம்: அஜித்தின் அதிரடி முடிவு

02:38 மணி

தல அஜித் கடந்த சில வருடங்களாக எந்த பொதுநிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பேசுவதில்லை, ஏன், அவருடைய படங்களின் புரமோஷனுக்கு கூட அவர் செல்வதில்லை. மேலும் மற்ற நடிகர்கள் போல் சமூக, அரசியல் பிரச்சனையில் கருத்து சொல்வதும் இல்லை

இந்த நிலையில் அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டப்பிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அஜித் மட்டுமே பின்னணி குரல் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி. அதற்கும் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென அஜித், படத்தயாரிப்பாளரிடம் சென்னை வேண்டாம், டப்பிங்கை ஐதராபாத்துக்கு மாத்துங்கள், அங்கு வந்து பேசி தருகிறேன் என்று கூறிவிட்டாராம். படக்குழுவினர்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் அஜித்தை எதிர்த்து பேச முடியாததால் அதற்கும் ஓகே சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 98 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393