தல அஜித்தின் மகள் அனோஷ்காவின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அனோஷ்காவின் பிறந்த நாளில் அஜித் செய்த ஒரு காரியம், அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. சென்னை அருகே உள்ள குழந்தைகள் காப்பகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அவர் நேற்று மதிய உணவாக பிரியாணியை அனுப்பியுள்ளார்., இதுகுறித்து அந்த குழந்தைகள் காப்பகத்தின் நிர்வாகி தனது ஃபேஸ்புக்கில் கூறியதாவது:

இன்றிரவு நம் நீலாங்கரை இல்ல குழந்தைகளுக்கு திடீர் சர்ப்ரைஸாக அஜீத் வீட்டிலிருந்து பிரியாணி வந்திருக்கிறது. எனக்கே நம்பமுடியாமல் எப்படி? என கேட்டேன். அவரை இதுவரை சந்தித்ததுகூட இல்லை. புத்தாண்டு கொன்டாட்டத்திற்கு வந்திருந்த ஒரு பெண் நண்பரின் தந்தை அஜீத்திடம் வேலை செய்வதாகவும், எதேச்சையாய் நமது இல்லத்தை பற்றி அறிந்து உடனே பிரியாணி ஏற்பாடு செய்து தனது ட்ரைவரின் மூலம் கொடுத்தனுப்பியிருக்கிறார் நடிகர் அஜீத்! (இன்று அவரது மகளின் பிறந்த தினம் என்பதை சற்றுமுன்பு தான் அறிந்துகொன்டேன்

அஜீத் பற்றி இதுபோல நிறைய விசயங்களை கேள்விபட்டிருக்கையில், அது நமக்கே நடப்பது ஒரு இனிமையான அனுபவம். நமக்கே சந்தோசமாய் இருக்கும்போது பசங்களின் சந்தோசத்தை கேட்கவும் வேண்டுமா? அவர் செய்தது மிகச்சிறிய விசயம் தான். ஆனால் அதை எல்லோரும் செய்துவிடுவதில்லையே! அதனால்தான் அவர் அஜீத்!

இவ்வாறு அந்த நிர்வாகி கூறியுள்ளார்