திருமணநாளில் அஜித்துக்கு ஏற்பட்ட சோதனை

தற்போது தல அஜித் பல்கேரியாவில் நடைபெற்று வரும் ஷீட்டிங்கில் இருக்கிறாா். தன்னுடைய தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்தும் வரும் அவா் தன்னுடைய காதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீடியோ காலில் தினமும் உரையாடி பேசி வருவது அவரது பாணி. இந்நிலையில் அஜித் ஷாலினி இருவாின் திருமண நாளான நேற்று, ரொம்ப அவுட்ரில் நடந்த ஷீட்டிங் இருந்த அஜித்துக்கு செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை. தன்னுடைய திருமண நாளுக்கு  ரசிகா்கள் முதல் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை மனமார தொிவித்து வந்தனா்.

இந்த சூழ்நிலையில் அஜித்துக்கு ஏற்பட்ட சோகம் என்னவென்றால், தன்னுடைய காதல் மனைவி ஷாலினிக்கு நோில் வந்து வாழ்த்து தொிவிக்காத சூழல் ஏற்பட்டது. பல்கேரியாவில் இருந்த காரணத்தால், ஒருவருக்கெருவா் பேசிக்கொள்ள முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தனா். கடைசியாக நள்ளிரவு  ஷுட்டிங் முடிந்து தன்னுடைய அறைக்கு திரும்பி பிறகுதான் சிக்னல் கிடைத்தாம். அதன் பிறகு தன்னுடைய மனைவிக்கு வீடியோ கால் வழியாக ஒருவருக்கெருவா் மனம் திறந்து தங்களுடைய வாழ்த்துக்களை தொிவித்து ஆனந்தக் கண்ணீாில் மிதந்துள்ளனா்.