விஸ்வாசம் படத்தை பார்க்க பணம் தராத தந்தையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற அஜித் ரசிகரின் செயல் அஜித்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்த பின்பும், அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். அவருக்கு ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே போகிறார்களே தவிர குறைந்தபாடில்லை. கடந்த 10ம் தேதி அவர் நடித்த விஸ்வாசம் படம் வெளியானது.

வேலூம் மாவட்டம் காட்பாடி பகுதியில் வசிக்கும் பாண்டியன்(45) என்பவரின் மகன் பெயர் அஜித்குமார்(20) ஒரு தீவிர அஜித் ரசிகர். அதிகாலை காட்சியை பார்ப்பதற்காக டிக்கெட் எடுக்க தந்தையிடம் பணம் கேட்க, அவர் அதை கொடுக்க மறுக்க, தூங்கிக்கொண்டிருந்த அவர் மீது பெட்ரோலை ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித் பாணியில் மன்றத்தை கலைக்க முடிவு செய்த விஜய்சேதுபதி?

அதேபோல், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் விஸ்வாசம் படம் வெளியான திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த அஜித் கட் அவுட்டுக்கு மாலை போட சில அஜித் ரசிகர்கள் ஏறிய போது கட் அவுட் கீழே விழுந்து சரிந்து அதில் 5 ரசிகர்கள் படுகாமயடைந்தனர். அதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், வேலூரில் அதிகாலை காட்சியில் தியேட்டரில் இருக்கை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு ரசிகர்களுக்கு கத்திக்குத்து விழுந்து தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  இன்று முதல் தல அஜித் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

இந்த அனைத்து செய்திகளும் அஜித்தின் காதுக்கு சென்றுள்ளனவாம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தரப்பிலிருந்து ரசிகர்களுக்கு விரைவில் ஒரு அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் கூறினால் கண்டிப்பாக அவரின் ரசிகர்கள் கேட்பார்கள். மேலும், ரசிகர்களை நெறிப்படுத்த வேண்டிய கடமையும் அவருக்கு இருக்கிறது. எனவே, ரசிகர்களை கட்டுப்படுத்த அவர் இப்போதாவது வாய் திறந்து பேச வேண்டும் என பலரும் சமூகவலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித்தின் விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

வாய் திறந்து பேசுங்கள் அஜித்……