அஜித்தின் வெண்கல சிலை, நூலகம்: ரசிகர்கள் அசத்தல்

08:00 மணி

தல அஜித் ரசிகர்கள் ஃபேஸ்புக், டுவிட்டரில் பரபரப்பாக இருப்பது மட்டுமின்றி அவ்வப்போது பொதுமக்களுக்கு சமூக சேவை செய்வதிலும் வல்லவர்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் ரூ.5 லட்சம் செலவில் நூலகம் ஒன்றை அமைக்கவுள்ளனர். இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது.

Loading...

மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமையவிருக்கும் இந்த நூலகத்தில் 5 லட்சம் புத்தகங்கள் வைக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், புத்தகங்களுக்கு மத்தியில் 7 அடி அஜித்தின் ஆளுயர வெண்கல சிலையும் வைக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த சிலைக்கு ஆர்டர் ஏற்கனவே கொடுத்துவிட்டதாகவும் மிக விரைவில் இந்த சிலை தயாராகிவிடும் என்றும் அஜித் ரசிகர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த நூலகத்தை திறந்து வைக்க அஜித் கண்டிப்பாக வருவார் என்றும் இதுகுறித்து அஜித் தரப்பிடம் ஏற்கனவே பேசிவிட்டதாகவும் ரசிகர்கள் உற்சாகமாக தெரிவித்தனர். அனேகமாக அடுத்த ஆண்டு அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி இந்த நூலகம் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

(Visited 7 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393