தற்போது தல 57 படபிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதே வேளையில் அவரது அடுத்த படத்திற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டன. பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படைப்பில் தல அவர்களுக்கு ஒரு பிரமாண்டமான கதை தயாரிக்கப்பட்டு அஜித்தின் கால் ஷீட்க்காக காத்திருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த பிரபல நடிகரின் படத்தில் அஜித்திற்காக தயாரிக்கப்பட்ட கதை இடம்பெற்றது அனைவரிடமும் பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தியது. இது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் படக்குழுவினர் ஆலோசனை நடத்திவருகின்றனர். அந்த நடிகர் தல அஜித்துக்கு போட்டியான “இரட்டை முக நடிகர்” என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படமானது வெள்ளித்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் இந்த செய்தியானது அந்த நடிகரின் ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அஜித்திற்கான கதை மற்றொரு நடிகரின் படத்தில் இடம்பெற்றது தல ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.