பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜித் படம்? அக்ஷய்குமார் நடிக்கிறார்?

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘வீரம்’. அண்ணன், தம்பி பாசம், காதல், குடும்ப செண்டிமெண்ட் என ஒட்டுமொத்த மசாலாக் கலவையுடன் வெளிவந்த இப்படம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித், சிவாவுக்கு தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க உறுதி கொடுத்து, அந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன.

இந்நிலையில், அஜித்-சிவா கூட்டணியில் முதன்முதலாக வெளிவந்த ‘வீரம்’ படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய்குமார் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ‘லாண்ட் ஆப் லுங்கி’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட் இயக்குனர் பர்ஹத் இப்படத்தை இயக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் கிடைத்த வரவேற்பு இந்தியிலும் கிடைக்கும் என்று படக்குழுவினர் மிகவும் எதிர்பார்க்கின்றனர்.