Home Uncategorized அஜித் படத்தில் அந்த நடிகருக்கும் இரட்டை வேடமா?

அஜித் படத்தில் அந்த நடிகருக்கும் இரட்டை வேடமா?

விவேகம் படத்தை அடுத்து தற்போது அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். அஜித் சிவா கூட்டணியில் உருவாகி வரும் நான்காவது படம் தான் விஸ்வாசம். வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி விஸ்வாசம் படத்தில் இணைந்துள்ளது. இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருவது ஏற்கனவே அறிந்த செய்தி. அடுத்து இரட்டை வேடத்தில் இன்னொரு நபரும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத்தில் நடைபெற்று வருகிறது. இரு வேடங்களில் நடித்து வரும் அஜித், ஒரு கெட்டப்பில் வயதானவராகவும், மற்றொரு வேடத்தில் யூத் கேரக்டரில் நடிக்கிறார். அவரை தொடர்ந்து இந்த படத்தில் தம்பி ராமையாவும் இரு வேடங்களில் நடிக்கிறார். அஜித்தை போலவே இவரும் வயதான வேடத்திலும், மற்றொரு ரோலில் இளமையான லுக்கில் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதில் நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த புதிய அப்டேட் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.

இந்நிலையில் அஜித் ரசிகா்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. எங்கள் தல அஜித்தை எத்தனை லுக்கிலும் எங்களால் பார்க்க முடியும். ஆனால் வேறு யாராவது வித்தயாசமாக காட்டுகிறேன் பேர்வழி என்று வயதான வேடத்தில் ஹீரோயின் நயன்தாராவையும் அந்த லிஸ்டில் சேர்த்து விடாதீர்கள் என்பது தான் அவர்களின் தாழ்மையான வேண்டுக்கோள்.