சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள விசுவாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளதாக வதந்திகள் கசிந்து வருகின்றன.

சமீபத்தில் அஜித்தை பிரபுதேவா சந்தித்ததாகவும், அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது குறித்து அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்தியை அஜித் தரப்பு மறுத்துள்ளது. அஜித்தை பிரபுதேவா சந்தித்தது உண்மைதான் என்றும், ஆனால் அந்த சந்திப்பு மரியாதை நிமித்தம் மட்டுமே என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.