நடிகர் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் சிவாவே இயக்குகிறார்  என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிவா அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார். விவேகம் படம் படப்பிடிப்பின் போது இரண்டு, மூன்று கதைகளை அஜித்திடம் அவர் கூறியதாக தெரிகிறது.

அதில் ஒன்று சரித்திர கதை கொண்ட படம் எனவும், அதில் அஜித் மீண்டும் நடிக்க வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது. அப்படி  ஒருவேளை இணைந்தால் இது இவர்களின் கூட்டணியில் 4வது படமாகும்.

விவேகம் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், விமர்சன ரீதியாக எதிர்மறையான கருத்துகளை பெற்றுள்ளது. அந்த தவறுகள் அடுத்த படத்தில் இடம் பெறாது என நம்புவோம்…