என் பெயரை யாரேனும் பயன்படுத்தினால்? – எச்சரிக்கும் அஜீத்….

11:03 காலை

எந்த ஒரு நபரும் தனது தனிப்பட்ட கருத்தை தெரிவிக்க நடிகர் அஜீத்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது என அவரின் வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.

சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அஜீத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் செய்திகள் வெளியிட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அஜீத்தின் சட்ட ஆலோசகர் நேற்று ஒருஅறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது கட்சிக்காரர் அஜித்துக்கு சமூக வலைதளமான ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் எந்த கணக்கு இல்லை. அவரது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சிலர் அவர்களது தனிப்பட்ட கருத்தை பரப்பி வருகின்றனர்.   
 
எனது கட்சிக்காரர் எந்த ஒரு வணிக சின்னம், பொருள், அமைப்புக்கு விளம்பர தூதர் இல்லை. அவர் எந்த ஒரு தனி நபரையோ, குழுவையோ, அமைப்பையோ, சமூக வலைதளங்களையோ ஆதரிக்கவில்லை. மேலும் சமூக, அரசியல் மற்றும் தன் சார்பாக தனிப்பட்ட கருத்தை வெளியிட யாரையும் அனுமதிக்கவில்லை.

அஜித் எந்த ஒரு கருத்தையும் தெரிவிப்பது இல்லை. சமூக வலைதளங்களில் அஜித் பெயர் மற்றும் புகைப்படத்துடன் பரவும்  கருத்துகள் அனைத்து பொய்யானவை” என அவர் தெரிவித்துள்ளார்.

அதை மீறி அவரின் பெயரை பயன்படுத்தி செய்திகள் வெளியிட்டால் நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது.

(Visited 34 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com