நடிகர் அஜித் தனது நடிப்பைத் தாண்டியும் பைக் ரேஸ், கார்
ரேஸ், ரிமோட் மூலம் இயங்கும் குட்டி வாகனங்களை
இயக்குபவர் என அனைவரும் அறிந்ததே.

தற்போது ஆளில்லா விமானங்கள் இயக்குவதிலும் வல்லவர்
என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து
ஆய்வு செய்ய தக்ஷா என்னும் குழுவை உருவாக்கினர்.
இக்குழுவினர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் ஆராய்ச்சி சார்ந்த போட்டிகளில் பங்குபெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  திருமணநாளில் அஜித்துக்கு ஏற்பட்ட சோதனை

தக்ஷா குழு இந்தாண்டு நடைபெற்ற அண்ணா
பல்கலைக்கழக்த்தின் எஸ்ஏஇ  ஐஎஸ்எஸ் ஏரோ டிசைன் சேலஞ்சில்
தங்களது அசாத்திய திறனை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின்
குவின்ஸ்லேண்டில் நடக்கும் யூஏவி மெடிக்கல் சேலஞ்ச்
2018-ல் பங்கேற்க தங்களைத் தயார் செய்து கொண்டனர்.

இதையும் படிங்க பாஸ்-  நடிகர் பார்த்திபன் டுவிட்டரில் ஆவேசம்

அதுமட்டுமின்றி தக்ஷா குழுவின் ஆலோசகராத் திரைப்பட
நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டார்.

அஜித் மேற்பார்வையில் தக்ஷா அணியினர் உருவாக்கிய
ஆளில்லா விமானம் அதிக நேரம் வானில் பறந்து சாதனைப்
படைத்துள்ளது.

தக்ஷா அணியினர் சர்வதேச போட்டியில் 2-வது இடத்தைப்
பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  அஜீத் விவேகம் டீஸர் வெளியிடும் தேதி அறிவிப்பு

தக்ஷா அணியினர் உட்படஆஸ்திரேலியாவில் நடந்த ‘Medical
Express 2018 UAV Challenge’ போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 8
நாடுகளைச் சேர்ந்த 11 குழுக்கள் தேர்வாகியுள்ளனர்.