சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வீரம்’,
‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களின் வெற்றியைத்
தொடர்ந்து தற்போது மீண்டும் இருவரும் கைகோர்த்திருக்கும்
திரைப்படம் ‘விஸ்வாசம்’.

இத்திரைப்படத்தில் நடிகர் அஜித் ‘துாக்கு’ துரை என்ற
கேரக்டரில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  கதை திருட்டு பிரச்சனையில் விஸ்வாசம் - விரைவில் பஞ்சாயத்து?

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இவர்களுடன் தம்பிராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு
உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில், டி.இமான் இசையமைத்துள்ளார்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள
ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற வருகிறது.
இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர்
கூறியிருந்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித் ரசிகர்கள் சிவாவிற்கு போட்ட கட்டளை

தற்பொழுது, இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு
நடிகர் ரவி அவானா ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில்,
‘விஸ்வாசம்’ படத்தின் சண்டைக் காட்சிகளின் புகைப்படங்கள்
இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் அஜித் ‘துாக்கு’ துரை என்ற
கேரக்டரில் நடித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது
ரசிகர்களின் இடையே மிகுந்த கொண்டாட்டத்தை
ஏற்படுத்தியுள்ளது.