அஜித் நடித்த ‘விவேகம் படம் மூலம் தமிழில் அறிமுகமான கமல்ஹாசன் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் ஏற்கனவே கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் உதவி இயக்குனராக பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அந்த படம் திடீரென முடங்கியதால் தற்போது அவர் விக்ரம் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விக்ரம் ஜோடியாக அக்சராஹசன் நடிக்கும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும், இந்த படத்தில் அக்சராஹாசனுக்கு அதிரடி ஆக்சன் காட்சிகள் இருப்பதாகவும் இயக்குனர் ராஜேஷ் செல்வா கூறியுள்ளார். மேலும் இந்த படம் தனது முந்தைய படமான ‘தூங்காவனம் போல் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்த படம் என்றும் இயக்குனர் ராஜேஷ் செல்வா கூறியுள்ளார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் இயக்குனர் ராஜேஷ் செல்வா கூறியுள்ளார்