கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசனின் கவர்ச்சியான புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாக வைரலானது. மேலும், சமுக வலைதளங்களிலும் இது வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதனைகுறித்து பல விமர்சனங்களும் வெளியானது.

இந்நிலையில், நடிகை அக்ஷரா ஹாசன் தனது தனிப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில்வெளியிட்டவரை கண்டுபிடிக்க வேண்டும் என மும்பை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் இவர் இதுகுறித்து பேசுகையில், மீ டூ இயக்கம் நாட்டை விழிப்படையச் செய்துள்ள நிலையில், இன்னும் சிலர் இது போன்று ஒரு இளம் பெண்ணின் தனிப்பட்ட படங்களை பரப்பி மகிழ்வது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், நான் வேண்டிக் கொள்வது என்னவென்றால், ‘‘நாமும் வாழ கற்றுக் கொள்ள வேண்டும், அடுத்தவர்களை கவுரவமாக வாழ விடவேண்டும். இணையதள உலகம் இது போல் என்னை தொந்தரவு செய்வதை தொடராது என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.