இந்தியன் 2 படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் 1996ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்தியாவில் புரயோடி போயுள்ள லஞ்சம் பற்றி அப்படம் பேசியது. ஏறக்குறைய 20 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2-வை ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க இருக்கிறது. சமீபத்தில், இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தியன் 2 ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து மேலும் சில புகைப்படங்களையும் லைக்கா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

இந்தியன் 2 படத்தில் யார் வில்லனாக நடிக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய்குமாரே, இந்தியன் 2 படத்திலும் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

உண்மையில், இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை நடிக்க வைக்க ஷங்கர் திட்டமிட்டார். ஆனால், அவரின் கால்ஷீட் கிடைக்காததால் அக்‌ஷய்குமாரையே நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த அக்‌ஷய்குமார், இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.