தான் சொன்ன மாதிரியே கலைஞர் சமாதியை நோக்கி தனது ஆதரவாளர்களை திரட்டி பேரணியை பிரம்மாண்டமாக நடத்தி முடித்துவிட்டார் முன்னாள் மத்திய அமைச்சரும் கலைஞர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி.

மு.க.அழகிரியின் இந்த பேரணியில் கலந்துகொண்ட கூட்டத்தினர் எண்ணிக்கையை பார்த்து திமுக தலைமை அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் வருகிறது. இந்த பேரணிக்கு ஒரு லட்சம் பேர்கள் வருவார்கள் என அழகிரி கூறியிருந்தாலும், குறைந்தது ஐம்பது ஆயிரம் பேராவது வந்திருப்பார்கள் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  நிர்வாண போராட்டம் : ஸ்டாலின் அறிவுரை

ஆனால் கலைஞர் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, என்னை ஆதரித்த ஒருவரை கட்சியில் இருந்து நீக்கினாங்களே, இப்போ தைரியம் இருந்தால் ஒன்றரை லட்சம் பேரு என் பின்னால் இருக்காங்க. எல்லோரையும் நீக்கிப் பார்க்கட்டும் என ஸ்டாலினுக்கு நேரடியாகவே சவால் விட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  விஜயகாந்தை அவமானப்படுத்திய பாஜக – தொண்டர்கள் வருத்தம் !

இந்நிலையில் இந்த பேரணியில் கூடிய கூட்டம் திமுக தலைமையை கோபமூட்டியுள்ளது. இந்த அளவுக்கு அழகிரிக்கு கூட்டம் கூடும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். யாருமே வரமாட்டார்கள் என்றே கூறப்பட்டது. ஆனால் 50 ஆயிரம் பேர் வந்திருந்தது ஸ்டாலினை உசுப்பி விட்டுள்ளது. இது தொடர்பாக தனது கோபத்தை தன்னோடு இருப்பவர்களிடம் திட்டி தீர்த்துவிட்டாரம். கூட்டம் கூடியது தொடர்பாகவும், வந்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின் என்ற தகவல் கசிந்துள்ளது.