திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் இன்னும் சில தினங்களில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ஆனால் அவருக்கு போட்டியாக கட்சியிலேயே இல்லாத அழகிரி உள்ளார். தனது பலத்தை விரைவில் நிரூபிப்பேன் என சவால் எல்லாம் விடுகிறார். ஆனால் உண்மையில் அழகிரியின் நிலைமை பரிதாபமே என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

கட்சியின் உண்மை தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள், ஒரு லட்சம் பேரை திரட்டி பேரணி நடத்துவேன் என அழகிரி கூறியது எல்லாமே வெறும் பீலா தான். பேரணி நடக்குமா என்பதே சந்தேகம் தான். அழகிரி தரப்பில் இருந்து போன் போட்டால் யாருமே எடுப்பதில்லையாம். அப்படி சிலர் எடுத்து பேசினாலும், அடுத்த நிமிடமே அவர்களுக்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து போன் போய்விடுகிறது.

இந்த சூழ்நிலையில் அழகிரி மிகவும் மனமுடைந்தவராக, என்னை கட்சில சேத்துக்க சொல்லுங்க, பொறுப்புகூடத் தேவையில்ல. அப்படி சேத்துக்கிட்டா பேரணியே நடக்காது என மூத்த நிர்வாகிகளிடம் கூறி வருவதாக தகவல்கள் வருகின்றன. என்னைக் கட்சியில் சேர்த்துக்கிட்டார்னா திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்ல பெரிய வெற்றியைப் பெற்று அவரு கையில் தருவேன் என கூறியுள்ளாராம்.

பேரணிக்கு ஆள் சேர்க்க முடியாமல் அழகிரி தரப்பு திணறுவதாலும், அழகிரியின் இந்த திடீர் மனமாற்றமும், திட்டமிட்டபடி பேரணி நடக்குமா நடக்காதா என்று அழகிரியுடன் இருப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.