மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது சமாதியை நோக்கி மு.க.அழகிரி தலைமையில் நேற்று அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் அழகிரியின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க இந்த பேரணி நடத்தப்பட்டாலும், தொண்டர்களின் விருப்பத்திற்காக இந்த பேரணி நேற்று நடக்கும் என அழகிரி முன்னதாகவே கூறியிருந்தார். இதற்காக நேற்று முன்தினமே அழகிரி சென்னை வந்தார். இதில் லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என அழகிரி கூறியிருந்தார். ஆனால் இதில் 1.50 லட்சம் பேர் கலந்துகொண்டதாக அழகிரி பேரணி முடிந்த பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  மறக்க முடியாத கலைஞர்-கண்ணீர் நினைவுத்துளிகள்

நன்றி: News18

இது அமைதி பேரணி என்பதால் யாரும் கோஷமிட வேண்டாம் என தனது ஆதரவாளர்களை வலியுறுத்தினார் அழகிரி. ஆனால் ஒரு கட்டத்தில் அழகிரி நிதானத்தை இழந்து தனது ஆதரவாளர்களை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அமைதிப்பேரணியில் அழகிரியே அடிதடியில் ஈடுபட்டது விமர்சிக்கப்படுகிறது.