இன்று திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். ஏற்கனவே சில காரணங்களால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி சேர்க்கப்படவில்லை. இன்று ஸ்டாலின் தலைவரான பின்னும் சேர்த்து கொள்ளப்படவில்லை என்றால். பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என அழகிரி நேற்று கூறினார்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது அழகிரி தென்மாவட்டங்களையே தன் கைக்குள் வைத்திருந்தார். அழகிரியின் அதிரடியால் திமுகவுக்கு தென்மாவட்டங்களே கோட்டையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வட்ட செயலாளரில் இருந்து வார்டு செயலாளர் வரை அழகிரியின் கட்டுப்பாட்டில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அழகிரியை கட்சியில் சேர்க்காமல் இழுபறி நிலையில் நீடிக்க செய்வதை அவரது ஆதரவாளர்கள் விரும்பாமல் மன வருத்தத்தில் உள்ளனர்.