அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் உள்ள பகைமை அனைவரும் அறிந்ததே, திமுக தலைவர் கலைஞர் காலத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி அதன் பின் அக்கட்சியில் இணைத்து கொள்ளப்படவில்லை. இந்நிலையில் தன் ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தி அழகிரி தன் செல்வாக்கை நிரூபித்தார்.

இந்நிலையில் இன்று அண்ணாதுரை பிறந்த நாளில் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறார்.பின்பு அழகிரியையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி இன்று கையெழுத்து இயக்கம் துவங்கப்படுகிறது என அவரது மகன் தயாநிதி தெரிவித்துள்ளார்.