திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியை நோக்கி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நேற்று பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என அழகிரி முன்னரே அறிவித்திருந்தார்.

விரைவில் எனது பலத்தை நிரூபிப்பேன், உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர் என கூறி வந்த அழகிரி செப்டம்பர் 5-ஆம் தேதி 1 லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ள அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்து, அந்த அமைதிப்பேரணியை நேற்று நடத்தி முடித்தார். ஆனால் கூறியபடி ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டார்களா என்பது கேள்விக்குறி தான்.

இதையும் படிங்க பாஸ்-  கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா கோரிக்கை: பரிசீலிக்குமா பாஜக அரசு?

பேரணியாக கருணாநிதி சமாதிக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கலைஞர் மறைந்து 30 நாட்கள் ஆனதை முன்னிட்டு இந்த பேரணி நடத்தப்பட்டது. வேறு நோக்கம் கிடையாது. பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என கூறினார்.

இதையும் படிங்க பாஸ்-  கஜா புயல் பாதிப்பு - திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி

இதனையடுத்து உங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாக வேளச்சேரி ரவி நீக்கப்பட்டுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அழகிரி, இந்த பேரணியில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் எல்லோரையும் கட்சியில் இருந்து நீக்குவார்களா என்றார். ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று அழகிரி அறிவித்த நிலையில், அந்த அளவு ஆதரவாளர்கள் கூடவில்லை என்பதே உண்மை. ஆனால் பல ஆயிரம் பேர் பங்கேற்று இருந்தனர்.