இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் அலெஸ்டர் குக் இந்தியாவுக்கு எதிராக அடுத்து நடக்கவுள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது கனவு அணியை அறிவித்துள்ளார்.

இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அரங்கில் உலகின் தலைசிறந்த அணியாக திகழ்கிறது. சமீப காலமாக வெளிநாட்டுகளில் கூட இந்திய அணி சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி போட்டியில் மோசமான தோல்வியை தழுவாமல் வெற்றி வாய்ப்புகளை நூழிலையில் தவறவிட்டது. அந்தவகையில் இங்கிலாந்துக்கு இந்தியா அதன் சொந்த மண்ணில் கடும் சவாலாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்தின் அலேஸ்டர் குக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக அறிவித்தார். தற்போது தனது கனவு கிரிக்கெட் அணியை அவர் அறிவித்துள்ளார். அதில் ஒரு இந்தியர் கூட இடம்பெறாமல் போனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அலெஸ்டர் குக்கின் கனவு அணி:

கிராஹாம் கூச் (கேப்டன்), மேத்யூ ஹைடன், பிரையின் லாரா, ரிக்கி பாண்டிங், ஏபி டி வில்லியர்ஸ், குமார் சங்கக்காரா, ஜாக் காலிஸ், ஷேன் வார்ன், முத்தையா முரளீதரன், ஜேம்ஸ் ஆண்டர்சன், க்லென் மெக்ரா.