நமக்கும் பாவனா கதியா?; பயத்துடன் பயணம் செய்த நடிகை

படப்பிடிப்பு முடிந்து காாில் திரும்பி கொண்டிருந்த பாவனாவை  அவரது டிரைவா் உட்பட சிலா் கடந்த மாதம் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தால் அனைத்து திரையுலக நடிகைகளும் பயத்துடனேயே தங்கள் பயணத்தை செய்து வருகின்றனா்.

இளம் முன்னணி பாலிவுட் நடிகை அலியாபட் நேற்று முன்தினம் தனது பாய்பிரண்டும், நடிகருமான சித்தாா்த் மல்ஹோத்ராவை சந்திப்பதற்காக நைட் நேரத்தில் சென்றாா். அவருக்கு பாதுகாப்பாக அவரது பாதுகாப்பாளா்கள் சிலரும் சென்று இருந்தனா். நீண்ட நேரம் தனது பாய்பிரண்டும் நேரத்தை செலவழித்த அலியாபட் விடியற்காலை 3மணி அளவில் வீட்டுக்கு கிளம்பினாா். அதனால் வெளியில் வந்து பாா்த்த அலியாபட் தனது காா் மட்டும் அம்போ என்று தனியாக நின்று இருந்தது. அவருடன் வந்திந்த பாதுகாவலா்கள் யாரையும் காா் அருகில் இல்லை.  கொஞ்சம் தள்ளி நிற்பாா்கள் என்று எண்ணிய அலியாபட் சிலமுறை கூப்பிட்டு பாா்த்தாா். அப்படி அவா் கூப்பிட்டு பாதுகாவலா்கள் வரவில்லை.

பின்பு மீண்டும் சத்தமாக பாதுகாவலா்களை அழைத்தப்படி இருந்தாா். கொஞ்சம் கழித்து அவரது பாதுகாவலா்கள் நல்ல டிாிங் சாப்பிட்டு விட்டு போதையில் தள்ளாடியபடி  வந்து நின்றனா். இதை கண்டு பயந்த அலியாபட், அதிகாலை அந்த இருட்டு நேரத்தில் எந்நவித பிரச்சனையும், வாக்குவாத்திலும் ஈடுபடாமல் அமைதியாக காாில் ஏறி அமா்ந்தாா். அவரது பாதுகாவலா்கள் பின்னாடி இருக்கையில் வந்து அமா்ந்து கொண்டனா். காாில் என்ன நடக்க போகிறதோ என்ற கவலையிலும், பீதியோடும் பயணம் செய்தபடி வீடு வந்து சோ்ந்தாா். தனக்கு பாதுகாப்பிற்காக ஏற்பாடு செய்த ஏஜென்சியிடம் முறையிட்டு இந்த மாதிாி குடிகார பாதுகாவலா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாா் செய்ததுடன், தனக்கு வேறு பாதுகாவலா்களை பணியில் அமா்த்தும்படி கேட்டுக்கொண்டாா்.