ராஜபாண்டி இயக்கத்தில் நடிகர் அரவிந்த் சாமி, ரெஜினா நடிக்கும் படத்துக்கு ‘கள்ளபார்ட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ ஆகிய படங்களை
இயக்கியவர் ராஜபாண்டி. இத்திரைப்படத்தை ‘மூவங் ஃபிரேம்’ நிறுவனம் தயாரிக்கிறது.

அரவிந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். ராதாகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பானது ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் பா.ரங்கநாதன் எம்.எல்.ஏ, தொழிலதிபர்கள் எஸ்.செல்வம், சிவசங்கர், பென்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, குட்டிபத்மினி, இயக்குனர்கள் விஜய் சுந்தர், ஜெயபிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரவிந்த் சாமி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ இம்மாதம் ரிலீஸாவைத் தொடரந்து, ‘நரகாசூரன்’ ‘சதுரங்க வேட்டை 2’ ஆகிய படங்கள் திரைக்கு வரத் தயாராக உள்ளது.

இதனைத் தொடர்ந்து, அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகும் ‘கள்ளபார்ட்’ படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பபை உருவாக்கி உள்ளது.