அமலா பால் நடிப்பில் இன்று வெளியாகயிருந்த நிலையில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக படம் வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா இதுவரை கண்டிராத ஒரு வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படத்தில் நடித்துள்ளார் அமலா பால். மேயாத மான் படத்தை இயக்கி கவனத்தை பெற்ற இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரம்யா சுப்ரமணியன், ஸ்ரீரஞ்சனி, ஆதிராஜ், விவேக் பிரசன்னா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

போனி கபூர் சொல்லும் இமாலயத் தொகை – இழுத்தடிக்கும் நேர்கொண்ட பார்வை பிஸ்னஸ் !

பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் விஜி சுப்பிரமணியன் இப்படத்தை தயாரித்துள்ளார். பல சர்ச்சை, போராட்டங்களுக்குப் பிறகு ஆடை படம் இன்று உலகம் முழுவதும் வெளியாக இருந்தது. ஆனால், இன்று காலை முதல் ஒரு காட்சி கூட வெளியாகவில்லை. இது அமலா பாலுக்கு மட்டுமல்ல, அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்தது.

இதனிடையே ரசிகர்களின் காத்திருப்புக்கு பலனளிக்கும் விதமாக இந்த படம் இன்று இரவு வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது.