amala paul
amala paul

சிந்துசமவெளி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அமலா பால். ஆனால் மோசமான விமர்சனம் காரணமாக அந்த படம் சரியாக போகவில்லை. இதையடுத்து மைனா படம் அவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்றது. தொடர்ந்து விஜய்,விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்தார். இதனிடையே இயக்குனர் விஜய்க்கும் இவருக்கும் காதல் மலர்ந்து கல்யாணத்தில் முடித்து தற்போது விவாகரத்தும் வாங்கிய செய்தி நாம் அறிந்ததே.

அமலா பால் தற்போது நடித்து வெளியாக உள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இந்த படத்தில் இவர் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமலாபாலிடம் கேள்விகளை கேட்டனர். அப்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து இருக்கிறீர்களே இதனால் மார்க்கெட் பாதிக்கப்படாதா? எனன்று கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமலா பால், நடிகைகளிடம் மட்டும் ஏன் தொடர்ந்து இந்த கேள்வி முன் வைக்கப்படுகிறது எனத் தெரியவில்லை. இந்தக் கேள்வியை அரவிந்த் சாமி, சூர்யா, விஜய், விஜய் சேதுபதியிடம் கேட்பீர்களா? என சற்று கோபமாகவே கேட்டார்.