ஹிந்தி படங்களுக்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்றும் அமலா பால்!!!

07:37 மணி

மைனா படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். பின் தெய்வத்திருமகள்,முப்பொழுதும் உன் கற்பனைகள் மற்றும் விஜயுடன் தலைவா போன்ற படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின் இவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் விவாகரத்து பெற்றனர். இதை தொடர்ந்து தனுஷ் தயாரித்த வெளியான படம் அம்மா கணக்கு இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை தந்தது.

பிறகு தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்தில் ஜோடியாக ஒப்பந்தம் ஆனார். மேலும் சிண்ட்ரல்லா, திருட்டு பயலே, மற்றும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என அடுத்தது படங்கள் குவித்தன.

மேலும் இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த குயின் பட மலையாள ரீமேக்கிலும் நடிக்கிறார். தனுஷ் இந்தி படங்களில் நடித்திருப்பதால் அவர் மூலம் அமலாபாலுக்கு இந்தி பட வாய்ப்பும் வரும் என பேசப்படுகிறது. இதனால் ஹிந்தி படங்களுக்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்ற உடல் பயிற்சி, சிகை அலங்கார சீரமைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

(Visited 9 times, 1 visits today)
The following two tabs change content below.
மோகன ப்ரியா
இவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com